எழுதப் படிக்க அறிந்திருப்பது கல்வி அறிவு ஆகுமா? சிந்திப்போம்.
தமிழ்நாட்டில் 80.09 விழுக்காடு கல்வியறிவு பெற்ற மக்கள் இருப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. அதனுள் 87 விழுக்காடு ஆண்களும், 73 விழுக்காடு பெண்களும் அடக்கம். இந்த புள்ளி விவர கணக்குகளுக்குள் இருப்பது நம்மைப் போன்ற மனிதர்கள் என்பதனை நினைவில் கொள்வோம்.
எழுதவும் படிக்கவும் அறிந்துள்ளவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் இந்த விவரங்கள் முன்வைக்கப் படுகின்றன. இவ்வளவு படித்த மக்கள் இருந்தும், இந்த சமுதாயம் உயர்நிலையில் இருக்கிறதா, அல்லது உயர்ந்த நிலை நோக்கி பயணிக்கிறதா என்று சிந்தித்தால் உண்மை அதற்கு நேரெதிர் என்பது புரியும். கட்சி, கொள்கை, சமயம், சாதி சார்புகள் தவிர்த்து, நடுநிலையாக இதனை அணுக வேண்டும். ஏதேனும் ஒரு சார்பு இருந்தாலும் நடுநிலை தவறி எல்லாம் நல்லாத்தான் இருக்கு என்றோ, எதுவுமே நல்லா இல்லை என்றோ முடிவெடுக்க நேர்ந்து விடும்.
ஒரு சின்ன உதாரணம். 80 விழுக்காடு படித்தவர்கள் கொண்ட மாநிலத்தில் வீட்டில் சேரும் குப்பையைக் கூட மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து கொடுப்பது இன்னமும் சாத்தியப்படவில்லை. குப்பையை ஒரு சமூகம் எப்படி கையாள்கிறது என்பதில் தெரிந்து விடும் அதன் கல்வியறிவின் இலட்சணம்.
ஆக, எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்பதல்ல, ஒரு மாநிலத்தின் கல்வியறிவிற்கான அளவுகோல். எதனை அவர்கள் படிக்கிறார்கள், எதன் படி ஒழுகுகிறார்கள், எவர் வழி நிற்கிறார்கள் என்பதில் இருக்கிறது இந்த மாநிலம் கல்வியறிவு கொண்டதா இல்லையா எனும் முடிவு.
ஊடகம் எவ்வளவு சீர்கெட்டுக் கிடக்கிறது என்பது முதல் பக்க விளம்பரங்களிலேயே தெரிகிறது. இப்படிபட்ட ஊடகங்களில் செய்தியைப் படிக்கவும், பகிரவும் அறிந்துள்ள மக்கள் இங்கு ஏராளம் என்பது மறுக்க முடியாத உண்மை. எழுத்தறிவு என்பதனை Horizontal (கிடைமட்டம்) Vertical (செங்குத்து) என ஒரு வரைபடமாக நினைத்துக் கொள்வோம். கீழே காண்க:
மக்களின் எழுத்தறிவு என்பது முக்கியமல்ல, அந்த எழுத்தறிவு அவர்களது சிந்தனையை எப்படி செம்மைப்படுத்துகிறது, செயல்களை எப்படி நெறிப்படுத்துகிறது என்பது தான் முக்கியம். தற்போதைய மக்களின் எழுத்தறிவானது, அவர்களை கையாள்வதற்கும், விளம்பரங்கள் மூலம் அவர்களை வியாபாரப்படுத்துவதற்கும், அவர்களின் சிந்தனையைச் சிறைபடுத்தவும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. எழுத்தறிவைக் கொண்டு, பெரும்பான்மை மக்கள் சமகாலச் சிந்தனைகள் மற்றும் செய்திகளை மட்டுமே உள்வாங்குகின்றனர்.
கடந்த கால வரலாறு, மெய்யறிவு, தத்துவம் மற்றும் ஞான நூல்களைப் படிப்போர் எண்ணிக்கை பெருகுவதல்லாமல் அருகிக் கொண்டே வருகிறது. இது நமது எதிர்கால சிந்தனையை மழுங்கடிக்கும் என்பது திண்ணம்.
பகுத்தறிவு பேசும் அரசியல் வாதிகளும் இதனைக் கண்டு கொள்வதாய் இல்லை, அவர்களுக்கு மக்கள் சிந்திக்கத் தொடங்குவது பேராபத்து போல் தோன்றுகிறது.
தீர்வு தான் என்ன?
இதற்குத் தீர்வு காணக் கூடிய சக்தியும், கடமையும், உரிமையும் அரசிடம் இருந்தாலும், மக்களின் ஒத்துழைப்பின்றி அரசினால் சாதிக்கக்கூடியது ஒன்றும் இல்லை. தனி மனிதர்களாகிய நாம், நமது குடும்பங்களில் இருந்து, நமது அடுத்த தலைமுறையினரிடம் இருந்து செயல் திட்டத்தை தொடங்க வேண்டும்.
ஏற்கனவே பல பதிவுகளில் சொன்னது போல, இது தலைமுறைகளாக சேர்த்து வைத்த பிழைகளின் தொகுப்பு, இதனைத் திருத்துவதற்கும் நாம் ஓரிரு தலைமுறைகளாவது கொஞ்சம் கொஞ்சமாக உழைக்க வேண்டியிருக்கும். நாம் செய்யக் கூடியன:
வீட்டில் நூலகம் அமைப்போம். கடந்த கால மெய்யறிவு, தத்துவம், ஞான நூல்களை வீட்டில் நிரப்புவோம். படிப்பு என்பதனை மனப்பாடம் செய்து மதிப்பெண் வாங்குவதாய் திணிக்காமல், இயல்பாக, எதார்த்தமாக, எதிர்காலத்திற்கான ஒரு கருவியாக குழந்தைகளுக்குப் பழக்குவோம். வாசிக்கக் கற்றுக் கொடுப்போம்.
கடந்த கால அனுபவக் குவியல்களாகிய வயதிற் பெரியோர்களைப் பேணுவோம். அவர்களுடன் உரையாடுவோம். சினிமா கூத்தாடிகளைப் பேட்டி கண்டு அவர்கள் படுக்கையறை வரைக்கும் நாம் அறிந்து கொண்டதெல்லாம் போதும். கடந்த தலைமுறைகள் அறியாமையால் செய்து வைத்திருக்கும் பிழைகளும், தவறுகளும் ஏராளம்; அதனை அவர்களே சொல்லக் கேட்போம். திருத்தங்கள் செய்ய முற்படுவோம்.
எதிர்காலம் குறித்த அச்சங்களை ஒதுக்கி, திட்டங்களையும், கனவுகளையும், அது சார்ந்த படைப்புகளை உருவாக்க முனைவோம். சமகாலத்தின் செய்திகளையும், சிந்தனைகளையும் சீர்தூக்கிப் பார்ப்போம், செப்பனிடுவோம்.
எனவே, எழுத்தறிவு எத்தனை விழுக்காடு எனும் மாயக் கணக்கை நம்பி எல்லாம் சரியாக இருக்கிறது என மயங்க வேண்டாம். கடந்த காலத்தை நிகழ் காலத்தோடு பொருத்தி எதிர்காலத்தை மாற்றக் கூடிய சக்தியாக எழுத்தறிவை அணுகுவோம். பார் புகழும் பாரதம் செய்வோம்.
நன்றி.
Beyond Literacy
Literacy is often seen as a measure of a country's progress. The higher the literacy rate, the more developed the country is assumed to be. But what if literacy is not enough? What if what matters more is what people are actually reading? (and not reading)
However, the true worth of literacy lies not in the mere ability to read and write, but in the kind of knowledge and wisdom it enables individuals to acquire.
The alarming reality is that a significant portion of the literate population remains confined to consuming superficial content, oblivious to the profound insights that history, philosophy, and ancient scriptures can offer, particularly in the case of India and Tamilnadu.
Many people who can read and write do not actually read what matters. They are able to read and write in a specific language or two, but they are not empowered to read the past, think radically about the future, or challenge the status quo of the present. In a way, literacy is used to manipulate them politically and for capitalistic exploitation.
It is high time we redefine the concept of literacy, urging individuals to transcend the confines of the present and embrace the richness of our collective past and the possibilities of our future. In this blog, we will delve deeper into the idea that literacy is not about being proficient in a language, but about unlocking the doors to enlightenment and empowerment.
Join me in exploring the transformative potential of genuine literacy and the imperative to expand our horizons beyond the ordinary.
The Graph of Literacy
As illustrated in this graph, literacy must enable the population or it's majority to expand beyond the present news, thoughts to works of wisdom from the past, such as ancient scriptures, experiences and recent history (full of mistakes) so as to make the future a fruitful one, by encouraging more people to actually write and create works of art, that inspires plans, dreams and aspirations for progressing as a global community.
The damages we have inflicted upon this planet and its systems over the past several generations, driven by greed, selfishness, and ego, can only be rectified over the span of the next few generations.
This can occur only if we restore the connection between the past and the present—a delicate process that should not be hastened or hurried, but rather approached with a sense of urgency.
This challenge can be addressed through the power of books and reading, offering a solution to mend the wounds we have caused.
Excuse my skepticism, but I find it hard to perceive technology as a solution to our problems. While it may bring about some temporary positive outcomes, it often seems to inadvertently generate more problems than it resolves.
A few things we can do:
Setting up a library at every home and filling it with books that holds ancient wisdom, knowledge and truths.
Promote reading for pleasure. Reading for pleasure is not only enjoyable, but it also helps to improve our critical thinking skills, empathy, and imagination.
Support libraries and bookstores. Libraries and bookstores are essential for providing access to books and other reading materials.
Encourage your children to write. Writing is a powerful tool for communication, self-expression, and creativity.
Celebrate literacy. We should celebrate literacy as a fundamental human right and as a tool for personal and social transformation.
In a world where the timeless creations of selfless and wise saints, crafted thousands of years ago, are disregarded and overlooked by the present generation, one can only fathom the fate that awaits our own creations. To be dismissed or ignored is not the mere outcome; it signifies a grim future where the essence of our collective history, intertwined with our present, fades into obscurity. The path we tread is one of self-imposed oblivion, a dire consequence of our reluctance to engage in the act of reading. For it is through reading that we preserve our connection to the past, fostering a deeper understanding of ourselves and forging a wiser path towards a meaningful future.
By reading the works of great thinkers and writers from the past, we can learn from their experiences and insights. We can also gain a better understanding of the world around us and our place in it. When we neglect to read, we are essentially cutting ourselves off from a vast storehouse of knowledge and wisdom. This is a dangerous thing to do, as it leaves us vulnerable to ignorance and prejudice.
Thank you.
Comments