தேடிச் சோறுநிதந் தின்று (Swiggy, Zomato, Foodie) — பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி (Social media, gossips, reels, shorts) — மனம்
வாடித் துன்பமிக உழன்று (Depression, loneliness, anxiety, infatuation) — பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து (Rudeness, attitude, irresponsibility) — நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி (The eventual ageing further worsened by masturbation, lack of self care) — கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் (The eventual death) — பல
வேடிக்கை மனிதரைப் போலே (Just because everyone does it) — நான்
வீழ்வே னென்றுநினைத் தாயோ? (அப்படித்தான் நினைப்பார்கள்)
பாரதியார் ஒருவரே என்றும் புதியதாய் திகழும் கவிதைக்குச் சொந்தக்காரர். மேற்சொன்ன இந்தக் கவிதை பற்றிய இந்த புதிய பார்வை, நவீன வாழ்வியலோடு எவ்வளவு ஒத்துப் போகின்றது, இன்றைய இளைஞர்களின் வாழ்க்கையை எப்படி விவரிக்கிறது என்று நாங்கள் வியந்தோம். உங்கள் பார்வைக்கும், கருத்துக்கும்.
Comments