மேற்கிற்கும் கிழக்கிற்கும் வாய்க்கால் சண்டை எல்லாம் ஒன்னும் கிடையாது. அவன் தீர்வை வெளியில தேடுவான். இங்க இவன் தீர்வை உள்ளேயே வெச்சிருப்பான். சிந்தனையில் வேறுபாடு அவ்வளவுதான்.
இது கலை, அறிவியல், கலாச்சாரம் தொடங்கி உணவுத் தட்டு வரைக்கும் தொடர்கிறது. மேற்கில் இருப்பதால் மேலை நாடு, கிழக்கில் இருப்பதால் கீழை நாடு என்பதே தவிர, அந்த நாடு மேலானது என்றோ, நம் நாடு கீழானதோ என்பதல்ல. இங்கே நமக்கு இன்னும் ஒரு நூற்றாண்டு காலத்திற்கு தொடர்ந்த unlearning தேவைப்படுகிறது. நம்மை நாமே self discovery செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. உணவும் மருத்துவமும் தொடர்பான ஒரு கருத்துப் பரிமாற்றம் சமீபத்தில் ஒரு நண்பருடன் நடந்தது. அதில் இருந்து, இந்த பதிவு:
உணவையும் மருத்துவத்தையும் நம்ம மரபுல ஒன்னுக்கொன்னு தொடர்புடையது அப்படிங்கற புரிதல்-ல தான் அணுகினாங்க. சமீபத்துல பார்த்த ஒரு உதாரணம்:
வெள்ளைக்காரன் சாப்பிட்டு முடிச்ச உடனே இனிப்பு சாப்பிடுவான் - Dessert-னு பேரு - எதுக்குடான்னு கேட்டா, சாப்பாட்டை ஒரு சுவீட் நோட்ல முடிக்கனும்பான் - சுவீட் சாப்பிட்டாதான் திருப்தியா இருக்கும் அவனுக்கு.
நம்ம ஊருல சாப்பிட்ட உடனே வெத்தலை போடுவோம். துவர்ப்பும் காரமும் இருக்கும். எதுக்குன்னு கேட்டா செரிமானம் நல்லா இருக்கும், வாய் சுத்தமாகனும். இங்க நமக்கு வைத்தியம் பழக்க வழக்கத்துலயே இரத்தத்துல ஊறி இருக்கு. அங்க அவனுக்கு சாப்பாடு வேற, வைத்தியம் வேறயா இருக்கு.
பிடிச்சதை சாப்பிடு, நோய் வந்தா வைத்தியம் பாத்துக்கங்கறான். நாம, நல்லதை சாப்பிடு, சரியானதை சாப்பிடு, நோய் வராம இருக்க சாப்பிடுங்கறோம்.
உலகத்துக்கு வைத்தியம் பாக்கறவனை விட, தனக்குத் தானே நல்ல வைத்தியனா இருக்கறவன் தான் நோயில்லா சமூகத்துக்கான விதை. Prevention, better than cure.
இது அலோபதி வைத்தியத்துக்கு எதிராகவோ, இல்லை சிதைந்து போன உணவு முறைக்கு எதிரான பதிவு இல்ல. வைத்தியமும், முதல் உதவியும், காயத்துக்கு சிகிச்சையும் அவசியம் தேவை, அதுக்கு எது சிறந்த மருத்துவம் அப்படிங்கறது தனி விவாதம். ஆனால் வாழ்வியல் நோய்கள், lifestyle diseases மற்றும் அது சம்பந்தமான நம்ம முன்னோர்களின் அறிவு, ஆராய்ச்சி பத்தி நம்ம மக்களுக்கு இருக்கற பார்வை எவ்வளவு மலிந்து கிடக்கிறது அப்படிங்கறது தான் இங்கே பேசுபொருள்.
உணவு ஒழுக்கம் மருத்துவர்களின் வாழ்க்கையை எளிதாக்கும். மருந்து நிறுவனங்களின் லாபத்தில் கைவைக்கும் என்பதால், இங்கே நோயாளிகள் நேரடி victim. மருத்துவர்கள், beneficiary victim. அவர்கள் வேலைப்பளுவால் அவதிப்பட்டாலும், ஊதியம் கிடைக்கிறது.
எனவே, உணவு ஒழுக்கம் பேணுவோம், மருத்துவர்களுக்கு நல்ல நண்பர்களாக மட்டும் இருப்போம். வாடிக்கையாளர்களாக அல்ல.
تعليقات