top of page
Writer's pictureJohneh Shankar

மிதமே இதம் - இன்று ஒரு சிந்தனை 03


மண்ணில் சொர்க்கம் என்பது, ஆரோக்கியமான உடல், தெளிவான சிந்தனை, புலால் இல்லாத உணவு, மண்பானை நீர், உழைக்கத் தயங்காத மனம் - இவ்வளவு தான். மற்றபடி, பணம், பொருள், வாகனம், பெரிய வீடு இவை எல்லாமே உடலுக்கும் உயிருக்கும் பாரம் தான்.


மித வேகம், மிக நன்று - சாலைகளில் காணக் கிடைக்கும் இந்த வாசகம், வாகன ஓட்டத்திற்கு மட்டுமல்ல, வாழ்க்கை ஓட்டத்துக்கும் தான்.


மித போசனம், மித போகம், மித வேகம் - இது நமக்குக் கைவந்து விட்டால், நாம் யார்க்கும் குடி அல்லாத வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கலாம். அதாவது, உணவு, இன்பம், இயக்கம் மூன்றும் மிதமாக வேண்டும்.


உணவில் மிதம்
மனதைக் கட்டுப்படுத்தவும், செறிவாக்கவும் பயிற்சிகள் தியானத்தில் தொடங்குவதாய் நினைக்கிறோம்; உண்மையில், உணவில் தொடங்குகிறது மனக்கட்டுப்பாட்டின் முதல் படி.

என் வட்டத்தில் ஒருவர், யூடியூபில் foodie என்று பிரபலமானவர். விதவிதமான அசைவ உணவுகள் எல்லாம் விரும்பி உண்ணுவதைப் பெருமையாக உலகோடு பகிர்ந்து கொள்பவர். உங்களில் பலருக்கும் அவரைத் தெரிந்திருக்கலாம். பெயர் வெளியிட விருப்பமில்லை. அவரைப் பார்த்து உணவில் நாட்டத்தை வளர்த்துக் கொள்ளும் அவரது நேயர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, அவர் மூல நோய்க்கு (piles) மருந்து எடுத்துக் கொள்வதும், மலச்சிக்கலால் அவதிப் படுவதும். உணவில் மிதம் அவசியம். இன்பமாகவே தோன்றி பெரும் துன்பத்தில் தள்ளுவதில் உணவே முதலிடம் பெறுகிறது.


எனவே, இரு வேளை உணவு, ஒரு வேளை அரைப் பட்டினியாகவும், பசித்தால் மட்டுமே உண்ணவும் பயற்சி செய்யுங்கள். உணவில் மிதமாக இருங்கள்.

இன்பம் துய்த்தலில் மிதம் தேவை.

அது உடலின்பமாக இருந்தாலும் சரி, ஐம்புலன்களால் நுகரப்படும் வேறு எவ்வகை இன்பமாக இருந்தாலும் சரி. மிதமாகவும், அளவாகவும், இயல்பாகவும் இருத்தல் நலம்.


உடல் இன்பம் என்பது, நாம் இந்த உலகிற்கு ஆற்ற வேண்டிய கடமைக்குக் கிடைக்கும் கூலி மட்டுமே. அந்தக் கடமையாவது, சந்நதியை தோற்றுவித்து, அதனை நல்லதொரு மனிதனாக சமூகத்திற்கு வளர்த்துக் கொடுப்பதே ஆகும். உடல் இன்பத்தை இவ்வாறு புரிந்து கொள்ளாமல், நமக்குக் கிடைத்த வரம் என்று மிகைப்படுத்திக் கொள்ளுதல், நம்மை நாமே அழித்துக் கொள்வதற்கு வழி வகுத்து விடும்.


இயக்கத்தில் மிதம் தேவை

பக்கத்தில் இருக்கும் கடைக்குக் கூட வாகனத்தில் செல்வதைத் தவிருங்கள். முடிந்த வரை காலார நடந்து செல்லுங்கள். உங்கள் சூழலை, சுற்றத்தை, அதில் இயங்கும் மனிதர்களை, பிற உயிர்களை பொறுமையாக உள்வாங்குங்கள். அவற்றில் எல்லாம் உங்களுக்கான பாடங்கள் இருக்கிறது. வேகமாக நகரும் அனைத்தும், வேகமாக அழியும். விபத்துக்கள்ளாவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது ஒரு புறம், வாகனத்தில் வேகமாக நகர்ந்து பழகிவிட்டால் உடல் மிக சீக்கிரமாக மூப்பை நோக்கி நகரத் தொடங்கி விடும்.


எனவே, மிதமே இதம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். மிதமாக வாழப் பழகிக் கொண்டால், யோகமோ, தியானமோ தேவை இல்லை - என் வார்த்தை இல்லை, வள்ளலார் வாக்கு.

Moderation: The Key to Heaven on Earth


Heaven on earth is not as expensive or unaffordable as one might imagine. It's essentially about having simple, plant-based food on your plate, a clear mind, and a healthy body that is not lethargic in taking action. All of these factors are mutually interconnected, with each one contributing to or resulting from the others in a continuous loop.


Being modest in what you express to the world and moderate in what you take in from the world, not only saves you a lot of time, money and effort but also liberates you to pursue your life with absolute freedom and purpose.

Moderation in

  1. what you consume (Food etc.),

  2. what you experience (Worldly Pleasures) and

  3. what you interact with (Work, Motion, Exercise etc.)

All three attributes are interconnected and affect your overall health, lifespan, and mental wellness. Above all, they also help you constantly elevate yourself towards better spiritual maturity and eventual liberation of your soul. This might sound like a lofty claim, as we are wired to believe that soul liberation and spiritual maturity only result from practices like meditation, abstinence, or yoga. However, by implementing moderation in your everyday life, your experience will provide better testimony to the benefits of this approach than my own words ever could.


In reality, the path to mind control does not start with yoga or meditation, but with our food habits.

By making conscious choices and limiting our meals to what we need rather than what our taste buds desire, and by developing discipline in what we eat and when, we can become masters of our minds, bodies, and souls. In fact, these practices can have a more profound effect on our ability to control ourselves than even yoga or meditation. By adopting these habits, we can develop a stronger sense of self-control and make positive strides towards our physical and mental well-being.


Moderation in Pleasure
(Sexual) Pleasure is a reward for doing our duty in this lifetime - experience life, create and raise better offspring. Not a bounty to be plundered, exploited, and abused as something that leads to self destruction.

Once you understand and accept this, the illusions and deceptions of the world begin to crumble, and a fresh perspective on reality ascends from within. The key to good physical and mental health is moderation in pleasure, including sexual pleasure, and in satisfying the other desires of the body beyond sex, in moderation.


Moderation in Motion

Are you always moving faster and longer than your true abilities? I am talking about taking a car or bike to even your shortest chore.

Moderation in motion, is achieved when you begin to move more in your true and ideal speed, 'walking often' simply.

In nature, what moves faster has higher rate of metabolism and shorter lifespan. Cheetahs vs elephants or tortoises for example. Humans have downgraded ourselves by outsourcing our speed to machines, so we move fast without higher metabolism, but there's a catch. We also tend to become more lethargic and sedentary which lowers our metabolism to negative levels and affects our lifespan, ageing and overall health.


So, walk more. Walk in a pace that allows you to observe the world that surrounds you. There's a story and lesson in everything that's around you and you need to WALK to get the most of it.

Inspired by the words of truth and wisdom by Saint Vallalar for a united, peaceful world.


The road is shared. Go Slow. Be Moderate.










21 views0 comments

Comentarios


bottom of page