வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு செடியின் மீது ஒரு பாறையை வைத்தால் அது அப்படியே இறந்து விடும். அதுவே பாறை மீது ஒரு செடி வளர நேர்ந்தால் அந்தப் பாறையையே காலப்போக்கில் பிளந்து விடும் அதன் வேர்கள்.
கீழ் நோக்கிப் பாயும் வேர்களுக்கு இருக்கும் வலிமை, மேல் நோக்கிப் பாயும் செடிக்கு இருப்பதில்லை. பணிவும், பொறுமையும் அத்தகையன. அதே சமயம், கீழ் நோக்கிப் பாயும் வேர்களுக்கு அதன் வலிமையைக் கொடுப்பது மேல் நோக்கி வளரும் கிளைகளும் இலைகளும், முயற்சியும், பயிற்சியும் அத்தகையன.
பணிவும், பொறுமையும் உன் வளர்ச்சியை உறுதிப் படுத்தும். முயற்சியும் பயிற்சியும் உன் வளர்ச்சியை துரிதப்படுத்தும். இவை நான்கில் ஒன்று குறையினும் வளர்ச்சிக்குத் தடையாம்.
If you place a rock on top of a growing plant, it will eventually die. However, if a seed manages to grow over a rock, it will gradually break the rock in two. The strength of the downward-growing roots is not apparent in the upward-growing plant.
This illustrates the power of humility and persistence. But also, It is the upward growth of shoots and leaves that gives strength to the roots. Similarly, the power of effort and practice is essential to success.
Humility and persistence will guarantee your success, while putting in effort and consistent practice will speed up the process.
Comments