top of page
Writer's pictureJohneh Shankar

மாற்றம் - Change - இன்று ஒரு சிந்தனை 02


பொதுவாக, உலக நன்மைக்காக நெகிழி (plastic) பயன்பாட்டைத் தவிர்ப்பது தொடங்கி, உடல் நன்மைக்காகவும், உயிர் நலனுக்காகவும் புலால் (Non-veg) தவிர்ப்பது வரை, எந்த ஒரு நல்ல மாற்றத்தை நீங்கள் உங்கள் வாழ்வில் செய்தாலும், உங்கள் சுற்றத்தில் சிலர் ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்பார்கள்.


"நீ மாறிட்டா உலகம் மாறிடுமா?"


இதற்கான பதிலை இந்தப் பிரபஞ்ச வெளியில் விதைத்தே ஆக வேண்டும். எனவே, இந்த உலகமே ஒரு திசையில் கண்ணை மூடிக் கொண்டு விரைந்து கொண்டிருக்கும் போது, நாம் நம் வாழ்வில் செய்யும் மாற்றங்கள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் சிறுபான்மையாகவே கண்ணுக்குத் தெரியும். அதனால் விளைவே இல்லை என்பது போல இருக்கும். பின்வாங்கி விட வேண்டாம்.


பொது நலனுக்காக, பிற உயிர்களையும், அவற்றின் சூழலையும் குறித்த அக்கறையில் நாம் செய்யும் மாற்றங்கள் சிறிதெனினும், பெரியதோர் வனத்தை உருவாக்கும் விதைகள் என்பதை உணருங்கள்.

அதன் விளைவுகள் இரண்டு:

  1. நான் மாறுவதால், எனக்கான உலகம் மாறுகிறது. எனக்கான உணவு, காற்று, நீர், ஒளி மற்றும் உணர்வுகள் தூய்மை அடைகின்றன.

  2. நான் மாறுவதால் என் தலைமுறையின் பாதையில் (trajectory) சிறு திருப்பம் உண்டாகிறது.


பல தலைமுறைகளாக மனிதர்கள் கூட்டாகச் செய்திருக்கும் பிழைகளை ஒரு தனி மனிதன் ஒரு வாழ்நாளில் திருத்த முடியாது தான். ஆனால் மீண்டும் பல தலைமுறைகள் நமக்குப் பின் இருக்கின்றன, அவை அனைத்தும் நமக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்புகள். இன்று நான் என் மனதளவில் செய்யும் ஒரு மாற்றம், என் பிள்ளையின் வாழ்க்கையையே மாற்றி அமைக்கும். யோசித்துப் பாருங்கள், நமது பெற்றோர்கள் செய்த / வாங்கிய / செய்ய மறந்த / அழித்த / ஏதோ ஒரு சிறு விசயம் இன்று நமது வாழ்வின் பெரும் அங்கமாக இருக்கும்.


நாம் செய்வது அறுவடை அல்ல, கண்ணுக்கு முன் மலை மலையாய் காட்சி அளிக்க. நாம் விதைக்கிறோம். விதைகள் கண்ணுக்குத் தெரிவதில்லை, தெரியவும் கூடாது. நல்ல மாற்றங்களை உங்கள் வாழ்வில் ஏற்படுத்திக் கொள்ள இருமுறை சிந்திக்காதீர்கள்.

 

Change


It is a common question that one faces when taking steps towards creating a better world, such as avoiding plastic to help the environment or abstaining from meat for better health, "Will the world change because you changed?" This question demands an answer, and I am sowing its seeds in the universe today.


The world around us is heading with speed in a specific direction with no clue. Initially, striving for change and swimming against the tide may feel futile, but it's essential not to give up. Small changes we make in our lives, with love, for the betterment of our planet and its inhabitants, are potent seeds that can grow into vast forests in the future. Such changes set in motion two important consequences:

  1. Firstly, when we make a change, for example, by giving up meat, ditching dairy or reducing our plastic usage, the world around us changes by a tiny bit, the results imperceptible to those who judge from outside. Our food, air, water and soul's emotions get purified, leading to positive transformations.

  2. Secondly, even a small shift in our behavior can cause a significant impact on the trajectory of future generations. The direction they take turns by a tiny degree, leading to a significant difference as we progress through time.

It is true that one person, in his lifetime, cannot correct the errors made by the whole humanity over generations; but, it is also true that there are generations to follow each person, and they are all opportunities to gradually fix our mistakes.


Our next generation = Our next chance, an opportunity. We all hold the key to either exploit or make the best use of these opportunities by making small but meaningful changes in our present lives.

The crises we face today are the result of our past actions, a colossal, visible mess that may seem impossible to clear. However, the choices we make today are the seeds we sow for tomorrow. Though tiny and often imperceptible, these seeds are meant to grow beyond our current vision. So, keep doing what you're doing, as the positive changes you make today will pay your soul back in just a few generations. Who knows, in the future, you may come back to this planet as a different person, shaped by the positive actions you take now.




14 views0 comments

Comentários


bottom of page