வெகு நாட்களாகவே, தமிழ் இலக்கணத்தில் வரும் மாத்திரை என்பது பற்றி மனதுக்குள் ஒரு குடைச்சல்.
நம்மை அறியாமல் கண் இமைத்துக் கொள்ளும் கால அளவுதான் மாத்திரை.
இது தெரிந்தது தான்.
கண் இமை நொடி என அவ்வே மாத்திரை நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே - தொல்காப்பியம்
இயல்பெழு மாந்தர்தம் இமைநொடி மாத்திரை - நன்னூல்
என்பதும் அறிந்ததே. ஆனால் அது ஏன் மாத்திரை?
மாத்திரை எனும் இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் இருக்கும்? பொருள் இல்லாமல் இப்படி அமைத்திருக்க மாட்டார்கள் நம் முன்னோர்கள். (முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல எனும் சிங் சக் அடிப்பது எனக்கு பிடிக்காது)
இமைநொடி என்று ஒரு வார்த்தை நேரடியாக இருக்கும் போது, மாத்திரை எனும் வார்த்தை ஏன்?
கண்ணை மூடி மூடித் திறந்து பார்க்கும் போது சட்டென்று ஒரு எண்ணம் தோன்றியது.
இமையை நாம் மிகவும் சிறுமையாக எண்ணிவிட்டோம். அடடா... இது தெரியாமல் போய்விட்டதே...
இமையின் பெருமைகள் கண்களை காப்பதோடு மட்டுமல்ல. வேறொரு தத்துவார்த்தமான உண்மையும் அதில் இருக்கிறது.
அது ஒன்னுமில்ல, நமக்கும் இந்த உலகத்துக்கும் இருக்கக்கூடிய மிகப்பெரிய, மிக முக்கியமான அறிவுக்கருவி, நம்ம கண்கள் தான்.
இந்த கண்களுக்கும் இந்த உலகுக்கும் இடையே இருக்கும்...
பெர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரீய திரை - அதான், மாஆஆஆஆஆத்திரை - இமை தானே?
இந்த திரை மூடித் திறக்கும், அந்த நொடிப்பொழுது... ஒரு மாத்திரை.
அப்பாடா ஒரு வழியா, மாத்திரைக்கு பொருள் புரிஞ்சாச்சு! தமிழன்னைக்கும், முருகப்பெருமானுக்கும் சரணம், சரணம், சரணம்.
எனக்குத் தோன்றிய இந்த அர்த்தம், வெறும் கற்பனையாகக் கூட இருக்கலாம். அல்லது, உண்மையாகவும் இருக்கலாம். சான்றோர், பெரியோர், பொறுத்தருள்க.
நன்றி
コメント