கடவுளின் மொழி என்று ஏதேதோ மொழியைச் சொல்கிறார்கள். இருக்கலாம். ஆனால் கடவுளே ஒரு மொழியாக வடிவெடுத்து வந்தால் அதுதான் தமிழ்; மிகைப்படுத்தவில்லை. தமிழ் அதிகாரம் செய்யாது, வளைந்து கொடுக்கும். விட்டுப் பிடிக்கும், தன் அழகையும், அருமையையும், எழிலையும் புரிந்து கொண்டவர்களை தாய் போல வளர்க்கும். தன்னைப் பேசியவர்கள் பொய்யரானாலும், வீணரானாலும் அவர்களை வாழவைக்கத் தவறுவதே இல்லை தமிழ். என்ன, பணமும் பொருளும் தீரும் மட்டும் அவர்கள் ஆட்டம் என்பது பலரும் புரிந்து கொள்வதில்லை. அவர்களை ஊழ்வினை பார்த்துக் கொள்ளும். ஆனால் ஆன்மலாபத்திற்கு என்று தமிழின் விரலைப் பிடித்து நடந்தவர்கள், வழிதவறியதாக வரலாறே இல்லை. காரைக்கால் அம்மையார், அவ்வை, சமயக்குரவர், சந்தானக்குரவர் தொடங்கி, வள்ளலார், வாரியார் வரை அனைவரும் promoted.
இந்த கேள்விக்கான எனது முழு பதிலைக் கோரா தளத்தில் காண்க: https://qr.ae/pypWWE
Comments