பெரும்பாலோர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர், ஏழைகளுக்கு பொருளுதவி செய்தால் அவர்கள் சிரிப்பார்கள், அதில் இறைவனைக் காணலாம் என்று. உண்மைப் பொருள் அதுவன்று.
ஏழை என்பது இங்கே எளியவர்களை குறிக்கிறது. எளிமையாக வாழப் பழகிக் கொள்வதற்கு மிகவும் தேவையான ஒன்று, போதுமென்ற மனம். இப்படி போதுமென்ற மனம் படைத்தது, தனக்கு மிஞ்சியதை பிறருடன் பகிர்ந்து கொள்ளும் போது மனதில் ஒரு மகிழ்ச்சி தோன்றும், புன்னகை நிரந்தரமாக முகத்தில் தாங்கும். இத்தகைய சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பது உறுதி.
அதை விடுத்தது, அள்ளி எடுத்து சேர்த்து வைக்கும் சொத்தை அளந்து பார்த்து கிள்ளிக் கொடுத்து இறைவனைப் பார்க்கலாம் என்றால் அது தவறு, அடிப்படையிலேயே தவறு.
ஏழை என்பவன் எப்போதுமே கையேந்துபவனாகவே இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. பணக்காரனும் தனக்கு மேலே ஒருவனிடம் கையேந்துகிறான் என்பது இரகசியமாக இருக்க வேண்டியதும் இல்லை.
Comments