top of page
Writer's pictureJohneh Shankar

சிந்தனை ஆக்கிரமிப்பு

ஏரிகள் ஆக்கிரமிப்பு, கோயில் நிலம் ஆக்கிரமிப்பு, என் பக்கத்து ப்ளாட் காரன் என் நிலத்துல ஆக்கிரமிப்புன்னு நிறைய செய்திகள் படிச்சிருப்போம். சிந்தனை ஆக்கிரமிப்பு பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா? Thought Encroachment அப்படின்னு சொல்லலாம். அதாவது, ஒருத்தரோட அனுமதி இல்லாம அவரோட சிந்தனையை சில காலத்துக்கு அல்லது நிரந்தரமா ஆக்கிரமிக்கறது தான் சிந்தனை ஆக்கிரமிப்பு.


விளம்பரங்கள், நிகழ்ச்சிகள், செய்திகள், சினிமாக்கள், அது சார்ந்த படைப்புகள்னு இப்படி ஒவ்வொரு நொடியும், நீங்க கண் விழித்திருக்கும் ஒவ்வொரு நொடியும் உங்க சிந்தனை ஆக்கிரமிக்கப்படுது.


உலகத்தின் எல்லா விசயங்களைப் போலவே, இதுலயும் நல்லது, கெட்டது, தேவை இல்லாதது, வேடிக்கையானது எல்லாம் இருக்கும்.

இது தவிர்க்க முடியாததும் கூட. ஆனா எந்த மாதிரியான விசயங்களை உங்க சிந்தனைய dominate பண்ண விடறீங்கங்கறது உங்க வாழ்க்கையை மாற்றக் கூடிய ஒரு கேள்வி.


நவீன தொழில்நுட்பங்கள் இந்த ஆக்கிரமிப்பை ரொம்ப வேகமா, ரொம்ப ஆழமா, நடத்துறதுக்கு catalyst-ஆ இருக்கு. 2010-ல இத்தனை Youtube channels, சமூக ஊடகங்கள் இது எதுவுமே கிடையாது. 2000-ல டிவி சேனல்ஸ் அதிகம் கிடையாது. 1990-ல வீடுகள்ல டிவியே கிடையாது. படிப்படியா இந்த சிந்தனை ஆக்கிரமிப்பு ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கும் ஒரு விஸ்வரூபம் எடுக்குது.


கடவுளைக் கற்பனைன்னு நினைச்சுகிட்டு, நம்ம சமுதாயம், கற்பனைகளை கடவுளா நம்பி வாழ்க்கையை நடத்திகிட்டு இருக்கறது இந்த சிந்தனை ஆக்கிரமிப்புன்னாலதான்.

இதெல்லாம் தப்பு, கார்பொரேட் சதி, பெரிய ஆபத்து தாழ்வான பகுதியை நோக்கி ஓடுங்கன்னு சொல்றதுக்கு நான் இங்க வரல, ஆனா இப்படி ஒன்னு இருக்குன்னு தெரிஞ்சுக்கறது உங்களுக்கு நிச்சயம் உபயோகமா இருக்கும். அடைமழைல நனையாம பறக்கற கொசு மாதிரி, இந்த நவீன சந்தை உலகத்தை navigate பண்ணுறது உங்களுக்கு எளிமையாம்.


இதெல்லாம் இருக்கறதுனால தான் தொழில்கள் நடக்குது, நெறைய பேருக்கு பிழைப்பு நடக்குதுன்னு நீங்க நினைக்கலாம். ஆனா தொழில்களும், அதைச்சார்ந்த நம்ம வாழ்க்கையும் நடக்கற விதம் நம்மோட சூழலை, நமக்கிருக்கற ஒரே வீடான இந்த பூமியை எவ்வளவு பாதிக்குதுன்னு நாம சிந்திக்கனும். இதுல இருக்குற குறைகளை, ஏற்றத்தாழ்வுகளை களைய நாம யோசிக்கனும். அதுக்குத்தான் இதைப் பத்தி சின்னதா ஒரு விதையை இங்க விதைக்கிறேன்.




ஒரு தனி மனிதனின் சிந்தனையும், ஒரு சமூகத்தின் சிந்தனையும் - இதற்கேற்ற வகையில நிகழ்வுகளை வகுக்கும் இயற்கையின் செயல்பாடும், நம்மோட எதிர்காலமும் - எல்லாம் Intricately connected dots. ஒன்னுக்கொன்னு ஆழமா தொடர்புடையது.


ஒரு இரண்டு நிமிடம் உங்க சிந்தனையை எனக்கு வாடகைக்கு விட்டதுக்கு நன்றி. மேலும் சிந்திப்போம்.

0 views0 comments

Comments


bottom of page